மயிலாடுதுறையில் பேரிடர் மேலாண்மை யுவா ஆப்த மித்ரா பயிற்சி நடைபெற்றது



தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் முதன்மை செயலாளர் சிகி தாமஸ் வைத்தியன் ஆணைப்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவுறுத்தலின்படியும் ஒரு வார கால யுவா ஆப்தமித்ரா பயிற்சி இந்திய அரசின் இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மேரா யுவ பாரத், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநில பேரிடர் மீட்பு குழு, என் எஸ்எஸ், என்சிசி, பாரத் ஸ்கவுட், ஆப்த மித்ரா உள்ளிட்ட துறைகள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. 

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீ தடுப்பு நடவடிக்கை, கயிறு கட்டும் செயல்முறைகள், சுனாமி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பயிற்சி, உயிர் காக்கும் சிபிஆர் முதலுதவி பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்த செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது. இளம் பேரிடர் நண்பன் பயிற்சியில் பங்கு பெற்ற தன்னார்வலர்களுக்கு முதலுதவி கிட், அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

இப் பயிற்சிக்கு கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜே. சௌந்தரராஜன் தலைமை தாங்கினார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஏ. பலராமன் முன்னிலை வகித்தார். இந்திய அரசின், மேரா யுவ பாரத் முதன்மை பயிற்றுணரும் மயிலாடுதுறை சிசிசி சமுதாயக் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான சிசிசி காமேஷ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் இரா. விஜயராகவன், வட்டாட்சியர் ஜி ராஜேஷ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ், கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மேரா யுவ  பாரத், என்சிசி, என்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தீயணைப்புத் துறையினர்,ஆப்த மித்ரா, காவல்துறையினர், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர், வருவாய் ஆய்வர் எஸ். வைத்தியநாதன்,பா கவிதா நன்றி கூறினர்.

Post a Comment

0 Comments