ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் அவர்களிடம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கதிரவன் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளான. கரூர் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவாக செயல்படுத்துவது,பரமக்குடி வைகை ஆற்றின் புறவழிசாலையை சீரமைத்து சாலை அகலபடுத்துதல்,பரமக்குடி வைகை ஆற்றங்கரையில் குடியிருந்து வரும் கனிக்கர் சமுதாய மக்களுக்கு புதிய வீடு மற்றும் பட்டா வழங்குவது.
பரமக்குடி நகர்இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் உள்ளிட்டவைகள் பரமக்குடி போகலூர் கமுதி நயினார் கோவில் அபிராமம் போன்ற ஒன்றியகளுக்கு குடிநீர் சாலை மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது சம்பந்தமான மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கனிவோடு கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்து விரைவாக கோரிக்கைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

0 Comments