நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள இ சி ஆர் சாலை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மாளிகையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக செயல் வீரர் வீராங்கனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களின் தலைமையில் நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் செயல்வீரர் வீராங்கனை பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் நகரப் பொறுப்பாளர்களும் களும் ஒன்றிய பொறுப்பாளர்களும் கிளைக் கழக பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டு அஇஅதிமுக கழகத்தின் செயல்பாடுகளை குறித்து கழகத்தை வழிநடத்த வேண்டும் என்று அனைத்து பொறுப்பாளர்களுக்கும் துல்லியமாக நாகை மாவட்ட செயலாளர் ஓ எஸ் பனியன் அவர்கள் விளக்கியுள்ளார் இதில் முன்னாள் அமைச்சர் இரா ஜீவா னந்தம் மற்றும் நகர பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று கழகப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும் ஓ எஸ் மணியன் தலைமையில் கழகப் பொறுப்பாளர்களுக்கு கட்சியை வழிநடத்த வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சாதனையும் புரட்சித்தலைவி அம்மாவின் சாதனையும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கழகத் தொண்டர்களையும் பொது மக்களையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை புரட்சித் தமிழர் எடப்பாடி அவர்களின் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார் இதற்கு கழகத் தோழர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுவோம் என்று உறுதியளித்தனர்.
நாகை செய்தியாளர் எல்.கலைச் செல்வம்




0 Comments