நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் திருத்தேவூரில் ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது உலகிலேயே துர்க்கை அம்மன் கிழக்கு நோக்கி அருள் புரியும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்தலம் இதுவாகும். பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ வராகி அம்மன் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். இந்த ஆலயத்தில் ஆனி மாத ஆசாட நவராத்திரி முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ வராகி அம்மனுக்கு வண்ண மலர்களை அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு மங்களப் பொருட்கள் பிரசாதமாகவும். அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்படுகளை விஜயேந்திரன் சுவாமிகள் முன்னிலையில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து கேழ்வரகு பச்சைபயிர் உள்ளிட்ட தானியங்களுடன் கூடிய கூழ் வகை கஞ்சி வழங்கப்பட்டது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments