ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -அருப்புக்கோட்டை சாலையில் உள்ள வழிவிட்ட அய்யனார் கோவில் பகுதியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன்,சிறுபான்மையினர் பிரிவு உமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் , மாநில இளைஞரணி துணை தலைவர் நைனா முகம்மது, இராமநாதபுரம் நகர தலைவர் முகம்மது காசிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments