தேனி மாவட்டம், பெரியகுளம்: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் நல்லாட்சியில், பெரியகுளம் பகுதியைச் G. குருமூர்த்தி பெரியகுளம் மாவட்ட கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனை முன்னிட்டு, தவெக கழக நிர்வாகியும், பத்திரிகையாளருமான ராம்செந்தில் புதிதாக பொறுப்பேற்ற குருமூர்த்தி நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, சட்டப்பணிகளில் நேர்மையுடனும், மக்கள் நலனை முன்னிறுத்தியும் பணியாற்ற வேண்டும் எனவும், ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் ராம்செந்தில் வாழ்த்து தெரிவித்தார்.
பெரியகுளம் பகுதியில் குருமூர்த்தி அவர்கள் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்ற செய்தி அறிந்த தவெக கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

0 Comments