இராமநாதபுரம், தமிழக வெற்றிக் கழகத்தின் கீழக்கரை நகர செயலாளர் ஆசிக் ரஹ்மான் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது கீழக்கரை நகரின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை மனு வழங்கினார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்னைகள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இரண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வராததால் பொதுமக்களும் நோயளிகளும் இன்னல் அடைந்து வருகின்றனர்.
ஆகையால் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பழைய மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு வேறு இடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மீன்மார்க்கெட் விரைவாக கட்டிதரவேண்டும் புதிய பேருந்து நிலையம் பராமரிப்பின்றி கிடக்கிறது இதனை பராமரிப்பு செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை மேலும் .வீடுகள் அதிகமுள்ள சில வார்டுகளில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் நேரடியாக கடலில் கலக்கிறது.
பல இடங்களில் வடிகால்களுக்கு மூடி இல்லை இதனால் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலை உள்ளது மேலும் நகரில் தெருக்களில் குப்பைகள் சரியாக அகற்றப்படுவதில்லை. குடிநீர் குழாய்களில் திறந்து மூடும் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாகிறது மேலும் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்வதில்லை.மேலும் சிறுவர்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் இயக்குவது, மாணவ மாணவிகளை அளவுக்கு அதிகமாக வாகனங்களில் ஏற்றிச் செல்வது போன்றவை நடக்கிறது மேலும் .
நாய்கள் மற்றும் மாடுகள் அதிக அளவில் தெருக்களில் சுற்றித் திரிகின்றன.இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கீழக்கரைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிக் ரஹ்மான் மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக்கொண்டார்.

0 Comments