ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் .M.அப்துல் நஜிமுதீன்,.P.S.S. லிங்கதுரை ஒருங்கிணைப்பில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும்ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் குழு 08.07.2026 ல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.சிவகுரு பிரபாகரன் அவர்களைமரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணிக்கான பயிற்சி வகுப்புகளை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடத்துவதை தவிர்க்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை உடனடியாக ஏற்று மாவட்ட ஆட்சிதலைவர் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியை ரத்து செய்து இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி நடத்திட உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மேலும் இராமநாதபுரம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட மாவட்ட தலைவர் P.S.S.லிங்கதுரை மாவட்டசெயலாளர் . S.R.காளிதாசு 11.06.2026 அன்று பரமக்குடியில் மாநில தலைவர் கு.தியாகராஜன் கலந்துகொண்ட பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான இராமநாதபுரம் நகர் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்தி தர வேண்டும் எ. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இராமநாதபுரம் நகர் பகுதியில் மேல்நிலைப் பள்ளி துவங்குவதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் நம்மிடம் தெரிவித்தார் அப்போது சங்க நிர்வாகிகள் சார்பில் ஆட்சிதலைவருக்கு நன்றி தெரிவித்தோம் நிகழ்வில் ஏனைய சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்

0 Comments