கீழ்வேளூர் அருகே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


மேலும், தனது தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், அருள்ஜோதி, அருள்செல்வம் ஆகியோர்  தலைமை வகித்தனர்.பொறுப்பாளர்கள் செந்தில்வேலவன், ரவீந்திரன், ராஜராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக சங்கரவடிவேல் நன்றி கூறினார்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments