கும்மிடிப்பூண்டி அருகே அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலின் தீமிதி திருவிழா



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 21.ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜை நடத்தப்பட்டது.  இன்று  நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது.



 இதனை தொடர்ந்து ஆண்கள் பெண்கள் என 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிய விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து அலகு குத்தியும் ஆலயத்தை வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக தீ மிதித்து தங்கள் நேற்று கடந்த செலுத்தினர் கும்முடிபூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினருடன் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



 இந்த நிகழ்ச்சியில் அதிமுக கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர்  கே எம் எஸ் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பத்தாயிரம் இருக்கும்   மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



Post a Comment

0 Comments