பொன்னேரி வட்டார நாடார்கள் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா



 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து பெருந்தலைவர் கர்மவீரர் கு.காமராஜ் அவர்கள் 124 பிறந்தநாள் விழா மற்றும் 14வது ஆண்டு விழா பொன்னரியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

 முன்னதாக பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் இருந்து பால் கூட ஊர்வலம் புறப்பட்டு சண்டை மேளங்கள் முழங்க பெருந்தலைவர் காமராஜர் வெண்கல சிலைக்கு பாலபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மாலை அணிவித்து பெரும் பானையில்    பொங்கல் வைத்தனர் மேலும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்து பேச்சு போட்டி, குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள், பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது தொடர்ந்து அண்ணா பாரதி பட்டிமன்றம் மற்றும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சமுதாயப் பிள்ளைகளுக்கு நினைவு பரிசு வழங்குதல், பால்குடம் எடுத்த மக்களுக்கு  நினைவு பரிசு வாங்குதல், நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

 பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை பொன்னேரி வட்டார நாடார் இளைஞர் நற்பணி மன்றம் தலைவர் மூர்த்திசாமி, பொதுசெயலாளர் தன்ராஜ் பென்சிங், செயலாளர் மதனகோபால்,பொருளாளர் ஜான்ராஜாசிங் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர்கள் நற்பணி மன்றம் தலைவர் த.பாஸ்கர், பொதுச்செயலாளர் ஆனந்த்ராஜ், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் இரத்தினசாமி ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக  ஆர் எஸ் சிவசங்கரமூர்த்தி நாடார், சி எஸ் பாண்டிய நாடார், அன்புதுரை,பி தங்கராஜ், சி ஜெயச்சந்திரன், ஏ அருண்குமார்,ஏ பொன்ராஜ் நாடார்,ஜே டேவிட் நாடார் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பித்தனர் மேலும் துணைத் தலைவர்கள்  ஜான்சன், தினகரன், புஷ்பராஜ், ராஜ்குமார், யோகேஸ்வரன், முத்துப்பாண்டி, சங்கர், தாமோதரன், ஆதிராஜன், முத்துக்குமார், சபரிநாத், அலெக்ஸ்பேரின்பன், ஸ்ரீராம், த.நவமணி மற்றும் துணை செயலாளர்கள் டாக்டர் ராஜேந்திரன், இமானுவேல், சக்திவேல், சீயோன் முத்துராஜ், ஜெயராஜ், பொன்சோலை, காமராஜ் மற்றும்  ஆலோசர்கள் ஜெய்சிங், லட்சுமணன், ஜெயப்பிரகாஷ்,சத்தியமூர்த்தி, கருணாகரன், கனகசபை, குமாரசாமி, மூர்த்தி,கிருஷ்ண மணி,சந்திரசேகர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  வெங்கடேசன், ஐசாக்,முருகன், இன்னாசிமுத்து, அரவிந்தன், பாஸ்கர், முருகன்,வேல்முருகன், பீட்டர், வெங்கடேசன், யோவேஷ் தங்கராஜ், ஆண்ட்ரூஸ் சாமுவேல் உள்ளிட்ட பொன்னேரி வட்டார இளைஞர் நாடார்   குடும்பத்தினர் பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments