நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கீழ்வேளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜன் தலைமையில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
கோவில் வளாகத்தில் ஏற்படக்கூடிய அவசர சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு உடனடியாக கட்டுப்படுத்துவது, மடப்பள்ளியில் உணவு சமைக்கும் போது தீ பரவினால் அதை விரைவாக அணைக்கும் முறைகள், பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், கோவிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீ விபத்து நேரத்தில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் நடைமுறையில் விளக்கி காட்டினர்.
நிகழ்ச்சியில் பயிற்சி அலுவலர்கள் ரஞ்சிதா, சக்திவேல் தீயணைப்பு படை வீரர்கள் செந்தமிழ்ச்செல்வன், ஆகாஷ், அஜித், பொன்மணி மற்றும் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்





0 Comments