கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைகல்வி அலுவலர் ஆய்வு

 


இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல். ரெஜினி மற்றும் நேர்முக உதவியாளர்  ஆகியோர் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிக்கு வருகை தந்த அதிகாரிகள் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைவசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் வருகைப்பதிவு குறித்தும் கேட்டறிந்தனர், ஆய்வின்போது மாணவர்களிடம் கலந்துரையாடிய முதன்மைக் கல்வி அலுவலர்,கல்விதான் வாழ்க்கையை உயர்த்தும் ஒரே ஆயுதம். ஒழுக்கம், நேரந்தவறாமை, கடின உழைப்பு ஆகியவற்றை கடைபிடித்து படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். செல்போன் போன்ற கவனச்சிதறல்களை தவிர்த்து இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்  என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Post a Comment

0 Comments