திருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த விவசாயிகளின் கடன் தள்ளுபடியை முழுவதுமாக வழங்க வேண்டும்.பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்திட வேண்டும்.
குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்கிட வேண்டும்.கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்கிட வேண்டும். உரிய காலத்தில் பயிர் காப்பீடு முறையை வழங்கிடு.பழைய விலைக்கு ரசாயன உரங்களை வழங்கிடு.தேவையற்ற உபகரணங்களை வழங்குவதை தவிர்த்து மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கிடு. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயம் ரமேஷ் மற்றும் ராமு ஆகியோர் தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதியை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



0 Comments