மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுக்கா,சாத்தங்குடியில் நடந்த சம்பவத்திற்கு போராடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் சிவன்மோகன்குமார் மீது சமுக வலைத்தளத்தில் சாதிய மோதல் உண்டாக்கும் எண்ணத்தில் தொடர்ச்சியாக சாத்தங்குடி கிராமத்தில் நடந்த சம்பவத்தை தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி போராடியதனால் மயிலாடுதுறை தொகுதி மாவட்ட செயலாளர் சிவமோகன்குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று தவறான செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருவதாகவும் இதுபோன்ற அவதூறு பரப்புவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பொன்னுதுறை தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியாவிடம் மனு அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

0 Comments