திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவை வடக்கு மாவட்ட மகளிர் அணியினர் கொண்டாடினர்



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் மஹாலில் தவெக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதியின் 37 ஆவது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஸ்ரீதேவி தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடினர். முன்னதாக வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததோடு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.



 இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்களான பிரபாவதி, காயத்ரி,உமா மகேஸ்வரி, கழக நிர்வாகிகளான திவ்யா, சண்முகவள்ளி, புஷ்பலதா, மெர்சி, கற்பகம் ,ஒன்றிய நிர்வாகியான சிவகாமி மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து தொகுதியில் சிறந்து பணியாற்றிடவும், எல்லா வலமும் நலமும் பெறவும் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள் கூறினர்.



Post a Comment

0 Comments