இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட பிரண்டைக்குளம் மற்றும் மேலாயக்குடி ஆகிய கிராம மக்களின் நீண்டநாள் பேருந்து வசதி கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும்,போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரின் வழிகாட்டுதலின்படியும், புதிய வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை பரமக்குடி பேரூந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது.
இப்புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் V. K.ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த புதிய வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையால் , மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் , போக்குவரத்து வசதியை மேலும் வலுப்படுத்தும். இந்நிகழ்வில் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


0 Comments