மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவருடைய மனைவி அஜிதாகுமாரி (50 வயது). மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இவர்களுக்கு சுவேதா, கீர்த்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார். அஜிதாகுமாரி நடத்தி வந்த பள்ளியின் மாடியில் அவரது வீடு உள்ளது. அவருடைய கணவர் முகுந்தன் இறந்துவிட்டதால், 2-வது மகளுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று காலையில் அஜிதாகுமாரி பள்ளி வகுப்பறையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments