தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றன.
மாணவர், மாணவியர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 15 மாணவிகள் அணிகளும், 20 மாணவர்கள் அணிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றன. முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மாணவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடினர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய பரபரப்பான ஆட்டத்தின் முடிவில், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், முத்துப்பேட்டை அரசு மாதிரி பள்ளிமூன்றாம் இடத்தையும்பிடித்தது.
முதலிடம் பிடித்த மண்டபம் முகாம் அரசு பள்ளிக்கு ரூ.48,000 பரிசுத்தொகையெம் இரண்டாம் இடம் பிடித்த தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 32ஆயிரமும், மூன்றாம் இடம்பிடித்த முத்துப்பேட்டை அரசு மாதிரி பள்ளிக்கு 16ஆயிரமும் வழங்கப்படும். சிறப்பாக விளையாடிய வீரர்களில் மண்டபம் முகாம் பள்ளி அணியில் இருந்து 7 பேர், தொண்டி அணியில் இருந்து 5 பேர், மாதிரி பள்ளி அணியில் இருந்து 3 பேர் மற்றும் பரமக்குடி லயன்ஸ் பள்ளி அணியில் இருந்து 2 பேர் என மொத்தம் 17 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டிகளில் நடுவர்களாக கார்த்திக், அருள் இனிக்கோ, சுரேஷ், மருதுசாமி, சிவகாட்சி பாலன், பிரசாத் ரூபன் ஆகியோர் செயல்பட்டனர். போட்டி ஏற்பாடுகளை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். முதலிடம் பிடித்து சாதனை படைத்த மண்டபம் முகாம் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் அன்னை ஷீபா பிளவர் லெட், எஸ்.எம்.சி தலைவர் சம்பத்ராஜா, பி.டி.ஏ தலைவர் பூபதி, உடற்கல்வி இயக்குநர் தமிழரசு, உடற்கல்வி ஆசிரியர் யேசு ராஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 Comments