ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக தொண்டி நிர்வாகிகள் தேர்வு



ராமநாதபுரம் கிழக்கு  மாவட்டம் தொண்டி பேரூர்  2026 ஆம் ஆண்டு அமைப்பு தேர்தல் கேஎஸ்கே ஜென்னத் மஹாலில் மாவட்ட தலைவர்  வழக்கறிஞர் ஜிஃப்ரி  தலைமையில் நடைபெற்றது.

 தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அஸ்ஸாம் மாவட்ட பொருளாளர் பனைக்குளம் ஹசன் மமக மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது எஸ்எம்ஐ மாவட்ட செயலாளர் யாசிர் மீனவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பொறியாளர் மகளிர் அணி மாவட்ட செயலாளர் செரிபா ஜெயினுலாப்தீன் பொருளாளர் கவுன்சிலர் சமீமா பானு ஒன்றிய செயலாளர்  மகளிர்  அணி கோட்டையம்மாள்  லட்சுமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில. தேர்தல் அதிகாரி கோவை சாகுல் ஹமீது  நிர்வாகம் குறித்து  சிறப்புரையாற்றி தேர்தல் நடத்தி வைத்தார். 

 எம் டி எஸ் மாநில துணைச் செயலாளர் கோவை அக்கீம் திருப்பூர் பேச்சாளர் ஹைதர் அலி கோவை ஜாபர் சாதிக், கோவை முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நகழ்வில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஜான்ராணி ஆலிமா  தமுமுக-வின் 31 ஆண்டுகால சேவைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

தொண்டி பேரூர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக காதர் தமுமுக  செயலாளராக  முகைதீன் பிச்சை மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளராக.     பரகத் அலி   தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளராக ஹம்மாது சேகு  தமுமுக துணை செயலாளர்களாக முஹம்மது யாசர், செய்யது அஹமது, சாகுல் ஹமீது மமக துணை செயலாளர்களாக அண்ணாநகர் சேகர், யாசர், ,எம்ஆர் பட்டனம் பாசில், தொண்டர் அணி செயலாளராக அசன் பாக்கர்,இளைஞர் அணி செயலாளராக ஜாசிர், மகளிர் அணி செயலாளராக ஜுனைதா பானு, பொருளாளராக  ஆலிமா முத்து நாச்சியா,துணை செயலாளர்களாக  ஆலிமா செய்யது சுல்தான் பீவி, பரிதாபானு,ஒன்றிய செயலாளராக ஜென்னத்துல் பிர்தவ்ஸ்  1-வது வார்டு தலைவராக முகமது சலீம்தமுமுக செயலாளராகஜலால்,மமக செயலாளராக சபீக் ரஹ்மான், பொருளாளராக முஹம்மது ரியாஸ்,  துணை தலைவராக அப்துல்லா,  மகளிர் அணி  செயலாளராக பிரேம் நிஷா   சித்தி ஆலிமா ஆசிக்கா கிழக்கு பகுதி தலைவராக. அகமது இபுராஹிம், தமுமுக செயலாளராக முஸ்தபா, மமக செயலாளராக கல்யாணம் பொருளாளராக சித்திக் அலி,  மகளிர் அணி செயலராக  நஸ்ரின் பானு நசிரா பானு ஆயிஷா பானு அஸ்மத் பானு வடக்கு பகுதி தலைவராக பௌசுல் நசீர் தமுமுக செயலாளராக முகமது ரியாஸ்கான், மமக செயலாளராக ரிஸ்வான் பொருளாளராக சிராஜ்தீன் பாதுஷா சக்கியா பானு நஸ்ரின் பானு தெற்கு பகுதி நிர்வாகிகளாக தலைவராக பஹாத்,தமுமுக செயலாளராக சிஹான்,மமக செயலாளராக நவ்ஃபிக்,பொருளாராக அல் அசீர்,ஹமிது சுல்த்தான் பீவி,ஆயிஷா சித்திகா சோபியா ஆயிஷா பரக்கத் அலி, 15-வது வார்டு மமக செயலாளராக மாரிமுத்து, பொருளாளராக மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

 தொண்டி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும்  அமைச்சருமான டாக்டர் ராஜீவ்  தொண்டியில் மினி ஸ்டேடியம்  அமைப்பதற்கு பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்ததற்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தொண்டியில் தொடரும் தண்ணீர் பிரச்சினைமுறையாக வினியோகம் செய்யவில்லை மக்களின் அவதியை போக்க முறையான வினியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிடவேண்டும்,  தொண்டி அரசுபெண்கள்       மேல் நிலைப்பள்ளி  600 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். கட்டட வசதிசுற்றுச்சுவர்  கழிப்பறை வசதி மாணவிகள் தங்கி படிக்க விடுதி வசதி மற்றும்  உடற்கல்வி ஆசிரியர் உடன் நியமனம் செய்ய வேண்டும் , தொண்டி  தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.

தமுமுக தொண்டி பேரூர் தலைவர் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments