கமுதியில் ஓவிய போட்டியில் 100 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

 


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கௌரவ தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் .

சென்னை தேர்ட் ஜெனரேஷன் மற்றும் பாபு ஓவிய பயிற்சி மையம் இணைந்து நடத்திய ஓவிய போட்டிநடைபெற்றது . இதில் பள்ளி 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தூத்துக்குடி அரிமா சங்க தலைவர்  மாரிமுத்து, லயன் கிளப் மெம்பர் மாரீஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் பாபு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியா, காயத்ரி, பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர் . கிராம நிர்வாக அலுவலர்  முத்துமாரி நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments