தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பழவேற்காடு மாணவர்கள் 31 தங்கம்,16 வெள்ளி,11 வெண்கல பதக்கம் வென்றனர்



ஆந்திர மாநிலம் நெல்லூரில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஆந்திரா,தெலுங்கானா,தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டனர். 19,17,14 வயது உட்பட்டோர் குறுவட்டம்,மாவட்ட அளவில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு,திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 58 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியர்களிடம் எதிர்த்து விளையாடி 58 மாணவர்களும் பரிசுகளை பெற்றனர். 



இதில் 31 மாணவர்கள் தங்கம்,16 மாணவர்கள் வெள்ளி,11 மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்றனர். தங்கம் வென்ற 31 மாணவர்கள் வருகின்ற ஜனவரி மாதம் டெல்லியில் நடக்கும் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

புலிகட் அகாடமி ஸ்டைல் சிப் கராத்தே நான்காவது டான் பிளாக் பெல்ட் பெற்ற அரங்கங்குப்பம் சின்ராசு தலைமையில் வெற்றி பெற்று பழவேற்காட்டிற்கு வந்த மாணவ மாணவிகளை பழவேற்காடு பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments