நாகப்பட்டினம் அருகே ஆற்றில் முகத்தில் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன்மகாதேவி ஊராட்சிக்குட்பட்ட மில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (43). நேற்று இரவு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.இந்த நிலையில், வடுகச்சேரியிலிருந்து வடுகச்சேரி செல்லும் வழியில் உள்ள ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த உறவினர்கள், அது மாயமான செந்தில் என்பதை உறுதி செய்து கதறி அழுதனர்.
மேலும், அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், கொலை செய்யப்பட்டாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.சம்பவம் குறித்து தகவலறிந்த வேளாங்கண்ணி போலீசார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூராய்வு பரிசோதனைக்காக உடலை ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், செந்திலின் இறப்பிற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சடலத்தை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்த சென்றதாக தகவல் ஆனது வெளியாகி உள்ளது.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

0 Comments