கும்மிடிப்பூண்டி: கேப்னின் பாயிண்ட் லபாரட்ரிஸ் நிறுவனம் சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் குப்பை சேகரிக்கும் மின்கல வாகனங்கள்



கும்மிடிப்பூண்டி, -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேப்னின் பாயிண்ட் லபாரட்ரிஸ் தனியார் நிறுவன பங்களிப்புடன் 21 ஊராட்சிகளுக்கு மொத்தம் ரூ.48 லட்சத்தில் 24 குப்பை சேகரிக்கும் மின்கல இயக்க வாகனங்கள் வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. 

மாவட்ட கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், தாசில்தார் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் குமார், மகேஷ் பாபு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழிற்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்சேவைகள் துறை அமைச்சர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மின்கல இயக்க வா கனங்களை ஊராட்சிகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

அதன் அடிப்படையில்.பூவலம்பே டு குருவராஜகண்டிகை ,  கவரைப்பேட்டை மாதர்பாக்கம் ஈகுவார்பாளையம். எருக்குவாய், பெரியபுலியூர், கண்ணன்கோட்டை, மாதர்பாக்கம்,தண்டலச்சேரி, தேர்வாய் கண்டிகை, ஏ.என். குப்பம், சூரப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, அய்யர் கண்டிகை, கிளிக்கோடி, புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 21.ஊராட்சிக்களின் பயன்பாட்டிற்கு மேற்கண்ட குப்பை சேகரிக்கும் மின்கல இயக்க வாகனங்கள் வழங்க ப்பட்டது. இதனையடுத்து கவரைப்பேட்டை அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் குமார் திறந்து வைத்தார். இதில் தமிழக வெற்றி கழக மாவட்ட பொருளாளர் கிருபாகரன் நகர செயலாளர் விஜய் பழனி ஒன்றிய செயலாளர்கள். அன்பு. ஜோதி. இஷாந்த்.த.வெ.க மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து ஆரணி ஆறு படுகை தூர் வாரும் பணிகளையும் அமைச்சர் குமார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ரவி. தவெ.க.மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன். கோபி. கே.கே சினிமா ரமேஷ்.ஆரம்பாக்கம் ஹரிபொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்.ஆய்வு செய்தார்.





Post a Comment

0 Comments