ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை காவல் நிலையத்தில் போலீஸார் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக சாத்தக்கோன் வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்து செய்து கொண்டிருந்த போது அச்சமயம் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்ற ஓட்டுனரை வளைத்து பிடித்துவிசாரித்தனர்.
விசாரணையில் அவர் பனைகுளம், சோகையன் தோப்பு நாகேஸ்வரன் என தெரியவந்தது மேலும் விசாரித்த போது வாகனத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வலி மாத்திரை உள்ளதாகவும் அதனை மாரிமுத்து என்பவரிடம் ஒப்படைத்து அதன் பின்னர்இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார் அதனை தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது பிளாஸ்டிக் சாக்கு சுற்றிய பத்து அட்டைப்பட்டியில் அட்டை பெட்டிக்கு 75000 மாத்திரைவிதம் 7லட்சத்து50ஆயிரம் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
அதனை கைப்பற்றி நள்ளிரவு மண்டபம் கடற்கரை காவல் நிலையம் கொண்டு வந்த நிலையில் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலிசார் தெரிவித்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக வலி மாத்திரைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments