நாகையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சமூக நீதித்துறை அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாட்டில் மாணவர்களுக்கான  விடுதிகளுக்கு “சமூக நீதி விடுதிகளில் மாணவர்கள் மாட்டிறைச்சி" வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்த கருத்தினை திரும்ப பெற வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேச்சு அமைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று உள்ள நிலையில்  நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேந்தர் தலைமை வகித்தார் புதிய தமிழகம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகுத்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய ஜனதா பார்ட்டி நிறுவனத் தலைவர் என். ஆர்  ராஜேந்திரன்  அனைத்து இந்திய மக்களாட்சி  நிறுவனத் தலைவர் டாக்டர் ஜே வி துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.புதிய தமிழகம் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments