சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகளின் 1098 குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பலரும் பாராட்டு தெரிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, December 3, 2022

சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகளின் 1098 குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பலரும் பாராட்டு தெரிவிப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி சாத்தனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகளின் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பற்றிய விழிப்புணர்வு பலரது பாராட்டை பெற்றது.சாத்தனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் சமமே என்றும் மாணவிகளின் சுய பாதுகாப்பு,தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098,பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஒன்றிணைந்து பல்வேறு விழிப்புணர்வை வழங்கியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது பாராட்டுக் கூறியது.

இரா.பாஸ்கர் செய்தியாளர்


No comments:

Post a Comment