சுற்றுலா பயணிகள் வருகையால் திற்பரப்பு அருவி திணறியது - MAKKAL NERAM

Breaking

Sunday, December 25, 2022

சுற்றுலா பயணிகள் வருகையால் திற்பரப்பு அருவி திணறியது

 

கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டி வருகிது. இந்தநிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் வருகையால் திணறியது. அருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற சுற்றுலா பயணிகள், அருவியில் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவி எதிரில் உள்ள நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்து குதூகலமடைந்தனர். அருவிப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று ஆகியவற்றை ரசித்தனர். அதுபோல் திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்வதைக்காணமுடிந்தது.

No comments:

Post a Comment