ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் - MAKKAL NERAM

Breaking

Thursday, December 29, 2022

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்

 


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து 17 பேர் உயிரிழந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ட்ரீம் 11, லூடோ, பப்ஜி உள்ளிட்ட 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் விளையாடிய, விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment