இரட்டை இலையை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் - MAKKAL NERAM

Breaking

Sunday, February 12, 2023

இரட்டை இலையை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம்

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 77 வேட்பாளர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 'கை' சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈ.வி.எக்க்.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி அவர் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

No comments:

Post a Comment