அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார் - MAKKAL NERAM

Breaking

Saturday, February 11, 2023

அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடி நிழலில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்றனர் இதனால் அப்பகுதி பொதுமக்கள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தரக்கோரி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நிதிலிருந்து ரூ 28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறை  கட்டிடத்திற்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.இந்த நிகழ்ச்சியில் 'வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கொண்டனர்.

No comments:

Post a Comment