நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' பாகம் 1 வருகிற 31-ந்தேதி ரிலீஸ் - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 21, 2023

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' பாகம் 1 வருகிற 31-ந்தேதி ரிலீஸ்

 

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'விடுதலை - பாகம் 1' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment