மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு கோவில்பட்டி நகர திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Monday, March 20, 2023

மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு கோவில்பட்டி நகர திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் இன் போது குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை கொண்டாடும் வகையில் கோவில்பட்டி நகர திமுக சார்பில்  கருணாநிதி தலைமையில அண்ணா பேருந்து நிலையம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment