தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவையின் மாநிலப் பொறுப்பாளர்கள் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆளும் தி.மு.க. அரசு, தன் தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக, கிராமக் கோவில் பூஜாரிகளுக்கு மாதச் சம்பளமாகரூ.2000/- வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.கிராமக்கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகை ரூ.10,000வழங்கப்பட வேண்டும்.
செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராமக்கோவில் பூஜாரிகள் நலவாரியத்தைச் சீர்படுத்தி, விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.அனைத்து கிராமக்கோவில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் பூஜாரிகளின் மறைவிற்குப்பின் அவரது மனைவிக்கு அத்தொகை வழங்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment