• Breaking News

    சிவகங்கை அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு

     

    சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறார்கள் உயிரிழந்தனர். உலகம்பட்டியை சேர்ந்த யாழினி (10), மகேந்திரன் (7), சுந்தர் (5) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நாகராஜ் என்பவரின் மகள் யாழினியும் நாகராஜின் சகோதரர் லட்சுமணனின் இரு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    No comments