எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதல்‌ விவசாயி பலி - MAKKAL NERAM

Breaking

Saturday, March 18, 2023

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதல்‌ விவசாயி பலி


தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வில்வ மரத்து பட்டி கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் என்பவர் மகன் அந்தோணி வயது 60 கூலி தொழிலாளி  எட்டயபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார் மகளை பார்த்துவிட்டு ஊருக்கு தனது இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கழுகாசலபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதி அந்தோணி சம்பவ இடத்திலேயே  பலியானார் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் லாரி டிரைவர் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment