விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர் .சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு கிட்டப் பார்வை, தூர பார்வை, வெள்ளெழுத்து, கண்ணில் சதை வளர்ச்சி உள்ளவர்களுக்கு தமிழக முதல்வரின் மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது எனவும்,மேலும் கண்ணீர் நீர்வடிதல், கண் அழுத்தம் நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நரம்பு பாதிப்பு மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கபட்டன.மேலும் கண்புரை நோய் உள்ளவர்களுக்கு நவீன முறையில் கண்ணில் விலையுயர்ந்த லென்ஸ் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்வின் போது ரோசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ஜெயமுருகன், ஒன்றிய குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளிட்டோர் கலந்துகொதெரிவித்தனர்.
No comments:
Post a Comment