விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். இந்த யானை 56 வயது உடையது ஆகும். மேலும் இந்த யானையை கோவில் விழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ராமர் கோவிலுக்கு இராஜபாளையத்தில் இருந்து லாரியில் கொண்டு வந்து உள்ளனர். அப்போது விருதுநகருக்கு வந்த யானை திடிரென லாரியிலேயே மயங்கி விழுந்து உள்ளது. இதனை அடுத்து உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும் கால்நடை மருத்துவர் குழுவினரும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் லலிதா யானைக்கு மருத்துவர்கள் 6 மாத காலம் கண்டிப்பாக ஒய்வு அளிக்க வேண்டும் என கூறி வந்த நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் யானையை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றதால் தான் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் கூறினர்.
இதனையடுத்து விருதுநகரில் வைத்து கடந்த 2 மாதமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் லலிதா யானை இன்று பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
உயிரிழந்த யானைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ,மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார், மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் யானையில் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment