விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 65 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 28 லட்சம் ரூபாய் மட்டுமே மாவட்ட நிர்வாகம் இழப்பீடாக வழங்கியிருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமார் இழப்பீடு வழங்க காலதாமதம் செய்யும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் காரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த விபத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து பல முறை மாவட்ட ஆட்சியரை பார்க்க முயன்றும் முடியாத நிலையில் இன்று நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வந்திருந்தனர்.
இதை எடுத்து மாவட்ட ஆட்சியர் இரு மாதங்களுக்குள் உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை எடுத்து மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டது.
No comments:
Post a Comment