கோவில்பட்டி அருகே குடிபோதையில் கட்டிட தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை போலீசார் விசாரணை - MAKKAL NERAM

Breaking

Monday, March 20, 2023

கோவில்பட்டி அருகே குடிபோதையில் கட்டிட தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விஜயாபுரி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் பெரிய மாரியப்பன் (55) அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மணிகண்டன் (42) .இருவரும் இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டியுள்ளார் அப்போது சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை புடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார்  விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காலில் வெட்டு காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர் பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment