சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர், பாக முகவர்கள் ( BLA-2 ) ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பூத் கமிட்டி தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர், பாக முகவர்கள் (BLA -2 ) கூட்டம் சத்தியமங்கலம் சுந்தர் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர். ஜானகிராமசாமி தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் முன்னிலை வகித்தார். பவானிசாகர் தொகுதி பொறுப்பாளரும், மாநில விவசாய அணி துணைச் செயலாளருமான அருண்குமார் சத்தியமங்கலம் நகர பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கா.கி. ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ் , நகர அவைத் தலைவர் ஜோசப், நகர பொருளாளர் பொன்னுசாமி, நகர துணைச் செயலாளர்கள் நீலமலை செழியன் கார்த்தி, மணிகண்டன், ஜெயந்தி, நகர மாவட்ட பிரதிநிதிகள் கே.எம்.எஸ். முருகன்,பவுஜில் ஹக், மூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் எஸ்.கே. லிங்கண்ணன், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள், வார்டு கவுன்சிலர்கள், வாக்குச்சாவடி பாக முகவர்கள், நகர சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments