அகிலேஷ் யாதவுக்கு எதிராக தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி என்ற புதிய கட்சி தொடக்கம்

 


தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி தொடக்கம் முலாயம் சிங் ஆதரவாளர்கள் தொடங்கினர்.

சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்த போது தமிழ் மாநில துணைத்தலைவராக இருந்தவர் சுப.சிவபெருமாள் யாதவ்.

இவர் இன்று தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி என்ற புதிய கட்சியை திருச்சியில் தொடங்கினார்.

இதில் மாநிலச் செயலாளர் முத்து ராமலிங்கம், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சரவண முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பெருமாள் யாதவ் கூறும் போது:-

முலாயம் சிங் யாதவ் தமிழக மக்கள் மீது பாசம் வைத்திருந்தார், சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது ரூ. 5 கோடி நிதி வழங்கினார். ஆனால் தற்போது அகிலேஷ் யாதவ் தமிழகத்தை கண்டு கொள்ளவில்லை. ஆகவே புதிய கட்சியை துவக்கியுள்ளோம். மாநிலம் முழுவதும் இருக்கும் முலாயம் சிங் ஆதரவாளர்களை ஒன்று திரட்ட இருக்கிறோம்.

தமிழக அரசு யாதவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. அழகு முத்துக்கோன் வரலாற்றை மறைக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாடு இருப்பது உண்மையானால் தமிழக அரசு பள்ளிகளில் இந்தியை இலவச விருப்ப பாடமாக அறிவிக்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும். எங்களுக்கு யாதவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடம் நல்ல ஆதரவு உள்ளது என கூறினார்.


Post a Comment

0 Comments