அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐம்பது லட்சம் மதிப்பில் மயான மேம்பாடு செய்ய, பராமரிப்பு செய்த சமுதாய கூடம் துவக்க விழா - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 4, 2023

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐம்பது லட்சம் மதிப்பில் மயான மேம்பாடு செய்ய, பராமரிப்பு செய்த சமுதாய கூடம் துவக்க விழா


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி ,  கோபி ஊராட்சி ஒன்றியம் ,  பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஐம்பது இலட்சம் மதிப்பில்  மயான மேம்பாடு செய்திடவும், மற்றும்  பராமரிப்பு செய்த சமுதாய கூடம், மார்கெட் கமிட்டி ஆகியவற்றை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

உடன் கோபி திமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர்  ரவீந்திரன் , பி.மேட்டுபாளையம் பேரூர் கழக செயலாளர்  குமாரசாமி , பி.மேட்டுபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர்  தனலட்சுமி குமாரசாமி,  பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் , திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment