கேரளா படகு விபத்து;பிரதமர் மோடி இரங்கல் - MAKKAL NERAM

Breaking

Monday, May 8, 2023

கேரளா படகு விபத்து;பிரதமர் மோடி இரங்கல்

 


கேரளா மலப்புரத்தில் தனூரில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

மாலை 6.30 மணிக்குப் பிறகு ஒட்டும்புரத்தின் தோவல் தீராமில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.படகில் குறைந்தது 30-40 பேர் இருந்ததாக மனோரமா நியூஸிடம் ஒரு இளைஞர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் அவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF-ல் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment