நாகுடி ஊராட்சி மன்ற தலைவரின் நிதி ஊழலுக்கு அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தை: பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்துரை பாய்ச்சல்


பகுஜன் சமாஜ் கட்சி கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சின்னத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி ஊராட்சியில் 01-05-2023 நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் 50 நபர்கள் கூட கலந்து கொள்ள வில்லை. அது மட்டும் இல்லாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டனர்.ஏன் என்றால் மக்கள் மத்தியில் நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் மீது அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் தவிர யாருக்கும் நம்பிக்கை இல்லை நாகுடி ஊராட்சியில் நடந்த நிதி ஊழலுக்கு இவரும் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இருவருக்கும் சம்மந்தம் உள்ளது. ஏன் என்றால் ஒரு ஊராட்சியில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வட்டார வளர்ச்சி அலுவலரும் 15 நாட்களுக்கு ஒரு முறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு ஊராட்சியை ஆய்வு செய்து இருக்கு வேண்டும் அப்படி ஆய்வு செய்து இருந்தால் நாகுடி ஊராட்சியில் ரூ.82 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை.ஒன்று உடந்தையாக இருக்க வேண்டும் இல்லை எனில் வேலையை சரியாக செய்யாமல் இருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் இதில் இவர்கள் இருவரும் குற்றவாளி ஆனால் இவர்கள் இருவரும் கடைநிலை ஊழியர்கள் ஊராட்சி செயலர்கள் மட்டும் நடவடிக்கை எடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தினால் எப்படி மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும்,அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேலுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதுக்கு இதை விட ஆதாரம் தேவை இல்லை. அதை விட நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஊழல் மீது நான் முதலமைச்சர் தனி பிரிவுக்கு புகார் கொடுத்து உள்ளேன். 



அதற்கு அறந்தாங்கி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு பதில் கொடுக்க சொல்ல பரிந்துரை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது அதில் எனக்கு பதில் 205(1) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று பதில் அளித்தார் ஆனால் இதுவரை இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் 1357/2023 மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று எனக்கு தகவல் கூறப்படுகிறது ஆனால் நான் நேரடியாக கேட்டதற்கு வழக்கு நிலுவையில் உள்ளது.என்று கூறினார் மேற்படி நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நிதி ஊழலுக்கு அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையாக செயல் பட்டு வருகிறார் .என்பது உறுதி எனவே அறந்தாங்கி ஊராட்சிகளில் நடந்த ஊழல்களில் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை இந்த ஊழலில் சேர்த்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடி பார்வையில் சரியான வட்டாட்சியர் தலைமையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சட்டம் மீது நம்பிக்கை வைக்க நடவடிக்கை எடுக்கும் மாறு நாகுடி ஊராட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments