தமிழ்நாட்டில் ஜூலை 3ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்படும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 21, 2023

தமிழ்நாட்டில் ஜூலை 3ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்படும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

 


தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில், மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதுவரை 75811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் (Rule of Reservation) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜுன் 30 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி ஜுலை 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment