ராஜன் நகர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 28, 2023

ராஜன் நகர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜன்நகர் ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.49.90.லட்சம் மதிப்பில் புதுக் குய்யனூரில் இருந்து ராஜன்நகர் வரை தார் சாலை புதுப்பிக்கும் பணியை, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் ,  சத்தி தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ  பூமி பூஜை செய்து  பணிகளை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் ஒன்றியகுழு துணைத் தலைவர் சுப்புலட்சுமி சுப்பிரமணி ,  ஒன்றிய துணைச் செயலாளர் என். சுப்பிரமணி, ராஜன்நகர் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா செல்வம் ,  மாவட்ட பிரதிநிதிகள் ஆறுச்சாமி , டி. கே. ரமேஷ் குமார், இளைஞர் அணி அமைப்பாளர்  நவீன் குமார், ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர்  குணசேகர், ஒன்றிய துணை செயலாளர்  டி பி. அசோகன், திமுக நிர்வாகிகள்  கோவிந்தராஜ், அண்ணாதுரை, ஒப்பந்ததாரர் மதன்குமார் ஆகியோர்  விழாவில் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment