தமிழ்நாடு தலைமை செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு ஐஏஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் - MAKKAL NERAM

Breaking

Friday, June 30, 2023

தமிழ்நாடு தலைமை செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு ஐஏஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

 


1988 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடர்ந்தவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். 35 ஆண்டுகள் சிறப்பாக குடிமை பணியை ஆற்றியுள்ளார். பல்வேறு துறைகளில் பொறுப்பில் இருந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தின் உயர் அரசு பதவியான தலைமை செயலாளர் பதவியில் இருந்து சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.


இன்றுடன் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய 49வது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதவிக்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் தனது ஓய்வு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் இறையன்பு பேசுகையில், ஓய்வுக்கு பின்னர் என்ன செய்யலாம் என்று இதுவரை சிந்திக்கவில்லை. முதலில் ஒரு மாதம் ஓய்வு எடுக்க போகிறேன். அதன் பின்னர் சமுதாயத்திற்காக செயல்பட உள்ளேன். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகள் மனநிறையுடன் பணியை செய்து முடித்துள்ளேன். என தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment