பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட செல்வார்,ஆனால் அதானி இல்லாமல் செல்லமாட்டார்: அமைச்சர் உதயநிதி தாக்கு - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 21, 2023

பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட செல்வார்,ஆனால் அதானி இல்லாமல் செல்லமாட்டார்: அமைச்சர் உதயநிதி தாக்கு

 


மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது முதலமைச்சர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார். தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதனை கண்டு பாஜக அஞ்சுகிறது.


என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்; கலைஞர் வைத்த பெயர் உதயநிதி, அப்படி அழைத்தாலே போதும். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்டவை பார்க்கும் போது சின்னவன்தான். பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட செல்வார். ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார். பாஜகவை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள், எதிர்க்க மட்டும் தான் செய்வார்கள். பாஜக திமிக்கவை எதிர்க்கிறது என்றால், நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றிய அரசு ED, சிபிஐ உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு திமுக அரசை அச்சுறுத்த நினைக்கிறது; எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தான் ஒன்றிய அரசு திமுகவை எதிர்க்கிறது; திமுகவில் சாதாரண கிளைச்செயலாளரை கூட பாஜக அரசு ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment