வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை: ஒரு நபர் ஆணையம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 21, 2023

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை: ஒரு நபர் ஆணையம்

 


புதுக்கோட்டையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய நீதியரசர் சத்யநாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை. இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது.


அறிவியல் பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விசாரணை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது என வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்ட ஒரு நபர் ஆணைய தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment